பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது என்று சொல்பவர்களின் உணர்வு சரியானதுதான் என்றாலும், அதை பகுத்தறிவோடு யோசிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மேலும், ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை, ஒலிம்பிக்ஸ் போன்ற தொடர்களில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாட போவதில்லை என முடிவெடுத்தால், இந்தியாவுக்குத் தான் அது இழப்பாக முடியும் எனவும், தொடரில் இருந்து வெளியேறி விடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.