23 வயதுக்குட்பட்டோருக்கான 2025 ஆம் ஆண்டு U23 உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில், சுஜீத் கல்கல், இந்தியாவுக்காக நடப்பாண்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை 10-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்று சுஜீத் தங்கம் பதக்கம் வென்றார்.