ஐசிசி மகளிர் உலகக்கோப்பையை முதன் முறையாக இந்திய அணி வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். நவி மும்பையில் உள்ள மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் களம் இறங்குகிறது. மறு புறம் தென் ஆப்பிரிக்க அணியும் முதன் முறையாக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இன்றையை ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.