டி.என்.பி.எல் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் சேலம் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 16.3 ஓவரிலேயே 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி தொடந்து 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது.இதையும் படியுங்கள் : ஹைப்பர்சோனிக் ஏவுகணை மேம்பட்ட நிலையில் உள்ளது