TNPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 9வது சீசன் இன்று தொடங்குகிறது. கோவை, சேலம், நெல்லை, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெறவுள்ளது. ஜூலை 6-ந் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் PLAY-OFF சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில், PLAY-OF மற்றும் இறுதிப்போட்டி திண்டுக்கல்லில் நடைபெறஉள்ளது. இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ்((DINDIGUL DRAGONS)) அணியை எதிர்கொள்கிறது கோவை கிங்சை((KOVAI KINGS)) அணி.