நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் அடித்துள்ளது. முதல் இன்னிங்சில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபாரமான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.