இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்தியா சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.