தற்போதைய காலக்கட்டத்தில் பும்ராதான் தலைசிறந்த பந்துவீச்சாளர் என்றும், அவருக்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம் என்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி தெரிவித்தார். ஸ்விங், துல்லியம், அனுபவத்தில் சிறந்து விளங்கும் பும்ரா தான் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று நினைப்பதாக கூறினார். 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பும்ரா 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 210 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்களையும், 70 டி20 போட்டிகளில் 89 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.