செப்டம்பர் 9ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக யுஏஇ, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடர் இன்று தொடங்கி 7ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை விளையாடிய பிறகு, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். போட்டிகள் அனைத்தும் சார்ஜாவில் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மூன்று அணிகளின் கேப்டன்களான முகமது வாசீம், சல்மான் ஆகா, ரஷித் கான் ஆகியோர் கோப்பையுடன் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டனர்.