முதல் வெற்றி : கொழும்புவில் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 6ஆவது லீக் போட்டியில் இலங்கையிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை சேர்த்தது. குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 56 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய அயர்லாந்து அணி, 19.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹாரி 40 ரன்களும், ரோஸ் 36 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியில் சிறப்பாக பந்து வீசிய மஹீஷ் 4 ஓவர்களில் 23 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Related Link நேபாளத்தை போராடி வீழ்த்திய இங்கிலாந்து அணி