இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது சிராஜ், நடப்பாண்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நடப்பாண்டில் டெஸ்ட் போட்டிகளில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜிம்பாப்வே வீரர் முரசபானியை பின்னுக்கு தள்ளி சிராஜ் முதலிடம் பிடித்தார்.