மும்பை வான்கடே மைதானத்துல நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலையும் தோல்வியடைந்தது இந்திய அணி. இதன் மூலம் 24 வருஷத்துக்கு பிறகு சொந்த மண்ணுல இந்திய அணி டெஸ்ட் தொடர முழுமையா இழந்திருக்கு. இதுக்கு முன்னாடி 2000ம் ஆண்டு இந்தியாவுல நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர இந்திய அணி முழுமையா இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.