இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராக இந்தியாவை சேர்ந்த ஆர்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக தொடர்வார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஸ்ரீதர் இந்திய கிரிக்கெட் அணியில் 7ஆண்டுகள் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.