10ஆவது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் 10ஆவது ஜூனியர் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் தொடக்க லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சந்தித்த இந்திய அணி, ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இறுதியில் 11-0 என்ற செட் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று, தாய்லாந்து படுதோல்வி அடைந்தது. தாய்லாந்து தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.