அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 139 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்கள் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்த நிலையில், 2-வது பேட்டிங் செய்த அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.