மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நவி மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலின் பேட்டிங் ஆடிய மும்பை அணி, 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதையும் படியுங்கள் : மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி