டெஸ்ட் போட்டியில் இங்கிலந்து மண்ணில் இரட்டைச் சதமடித்த முதல் இந்திய கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். மேலும் 46 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் கில் படைத்துள்ளார். 1979-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுனில் கவாஸ்கர் 221 ரன்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.