45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் மற்றும் பெண்கள் அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவில், இந்தியா தொடர்ந்து உயர்ந்து பிரகாசிக்கிறது எனவும், சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் முதல் 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரை விளையாடி இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தங்கம் வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நமது செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு எல்லைகளை தாண்டி உலக அரங்கில் பெருமை சேர்த்திருப்பது மனதிற்கு இதமாக இருக்கிறது எனவும், இந்த வரலாற்று மிக்க சாதனைக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.