பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி கையோடு எடுத்து சென்ற ஆசிய கோப்பை, இன்னும் சில நாட்களில் மும்பைக்கு வரும் என பிசிசிஐ உறுதிபட தெரிவித்துள்ளது. இல்லையென்றால், வரும் 4-ம் தேதி துபாயில் நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிசிசிஐ தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.