9-வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டி இரவு 7.30 மணி தொடங்குகிறது.