தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில், ரிஷப் பண்ட் ,ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரல், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, அக்சர் படேல், முகம்மது சிராஜ், நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இடமில்லாததால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.