உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரஃபேல் நடால், தாம் ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்த எக்ஸ் பதிவில், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள டேவிஸ் கோப்பை இறுதிப்போட்டியுடன் ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால், 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், 14 முறை பிரெஞ்ச் ஓபன் பட்டங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். 38 வயதான ரஃபேல், டென்னில் போட்டியில் அழியாத முத்திரையை பதித்து உலகின் 2-வது வீரராக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகள் தனது விளையாட்டில் கடும் சவாலாக இருந்ததாகவும் நடால் குறிப்பிட்டுள்ளார்.