இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில், சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்களுக்காக மாஸ்டர்ஸ் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆஃபிரிக்கா, மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடுகின்றன.