புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய போட்டியில் தமிழ் தலைவாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு டைட்டன்ஸ் அணி இறுதியில் 43-29 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.