டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானது குறித்து சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. ‘நிறங்கள் நிச்சயம் மங்காது’ என்ற தலைப்பில் தனது புகைப்படத்தை இணைத்து அவர் பதிவிட்டுள்ளார். இந்திய டி20 அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சனுக்கு, சுப்மன் கில் வருகையால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. தற்போது கில் இல்லாததால் டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது உறுதியாகி உள்ளது.