அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரின் கடைசி போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 1க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பிரெடியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் குவித்தது.தொடர்ந்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதையும் படியுங்கள் : மத்திய கிழக்கு பகுதிகளுக்கு சென்ற அமெரிக்க போர் விமானங்கள்..