ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் எஞ்சிய இரண்டு போட்டிகளில் இருந்து குல்தீப் யாதவ் விடுவிக்கப்படுவதாக இந்திய அணி அறிவித்துள்ளது. எதிர்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் பொருட்டு தற்போது நடைபெறும் இந்தியா ஏ - தென் ஆப்பிரிக்கா ஏ இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் அவரை விளையாட வைக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளது. இதனால் அவர் டி 20 போட்டிகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில், 4வது போட்டி வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது.