ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்த சுப்மன் கில்லை விராட் கோலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருக்கும் இன்ஸ்டா ஸ்டோரியில், அருமை STAR BOY என்றும், வரலாற்றை மாற்றும் ஒரு ஆட்டத்தின் தொடக்கம் மேலும் மேலும் வளரட்டும் என்று பதிவிட்டுள்ளார். எல்லா பாராட்டுகளுக்கும் கில் தகுதியானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.