சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் உள்ளதைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பவுலிங் அணிக்கான நேரக் கட்டுப்பாட்டை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஒவரை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.