ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹாங்காங் அணியை வீழ்த்திய இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 149 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 18 புள்ளி 5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது.