தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் 13 தங்கம் உட்பட 16 பதக்கங்களை தட்டி சென்றனர். நேபாளம் தலைநகர் காத்மண்டுவில், தெற்காசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் 19 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் அணி 3க்கு 1 என்ற கணக்கிலும், 15 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான இறுதி சுற்றில் 3க்கு 0 என்ற கணக்கிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் இந்தியாவின் குஷால் சோப்தா 3க்கு 1 என சகவீரர் பாலமுருகனை வென்றார். 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தனிநபர் ஃபைனலில் இந்தியாவின் அனன்யா 3க்கு 1 என பிரிதாவை வீழ்த்தி தங்கம் வென்றார். இத்தொடரில் இந்தியாவுக்கு 13 தங்கம், 3 வெள்ளி என மொத்தம் 16 பதக்கம் கிடைத்தது.