எலும்பு முறிவு மற்றும் மண்ணீரலில் ஏற்பட்ட ரத்த கசிவில் இருந்து அறுவை சிகிச்சை இன்றி அதிரடி பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் குணமடைந்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் கடந்தவாரம் நடந்த கடைசி மேட்சில் கேட்ச் பிடிக்கும் போது கீழே விழுந்து ஸ்ரேயாஸ் காயமடைந்தார்.அவருக்கு விலா எலும்பில் முறிவும் உடல் பாகங்களில் ரத்த கசிவும் ஏற்பட்டது. இதை அடுத்து ஆபத்தான நிலையில் சிட்னி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை இன்றி மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் தேவ்ஜிம் சைகியா தெரிவித்தார். தற்போது ஷ்ரேயாஸின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஐசியூவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.