விலா எலும்பு முறிவு மற்றும் மண்ணீரல் ரத்தகசிவில் இருந்து குணமடைந்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர் தாம் நல்ல முறையில் குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். இன்ஸ்டாவில் இதை தெரிவித்துள்ள அவர், ஆபத்தான காலகட்டத்தில் தமக்காக பிரார்த்தித்தவர்களுக்கும், குணமடைய வாழ்த்தியவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், சிட்னி மைதானத்தில் கேட்ச் பிடிக்கும் போது தரையில் விழுந்து காயமடைந்த ஷ்ரேயாஸ் அய்யருக்கு சிட்னி மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை இல்லாமலேயே அவர் குணமடைந்து வருவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் பூரண குணமடைய மேலும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என்பதால் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : கவுகாத்தி டெஸ்ட் - காலை 9 மணிக்கே தொடங்கும் என தகவல்