ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முன்னணி வீரர்களான ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் இடம்பெற வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இவர்களை பரிசீலிக்க தேர்வுக்குழு விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது. சமீப காலமாக இந்திய டி20 அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களையே தேர்வுக்குழு பரிசீலிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.