தமக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஷர்துல் தாக்கூர் தனது நீண்ட நாள் காதலியான மிட்டாலியை கடந்த 2022 ம் ஆண்டு திருமணம் செய்தார். தற்போது இத்தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில், பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.