ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். சீனாவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் மற்றும் பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக் பலப்பரீட்சை நடத்தினர். பரபரப்பான ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் 6க்கு 4, 3க்கு 6, 2க்கு 6 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.