சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை டிரேடிங் முறையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக லக்னோ அணியும் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே நடைபெற்ற ஒரு போட்டியில் முகமது ஷமி பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் கிளீன் போல்டு ஆகும் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்துள்ளது. இதனால் முகமது ஷமி லக்னோ அணியில் இணைந்து விட்டாரா? இல்லையா? என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.