தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி, முதலில் பந்து வீசி தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை திணற விட்டதோடு, 111 ரன்கள் என்ற எளிய இலக்கை வெறும் 13.1 ஓவர்களில் கடந்து வெற்றி பெற்றது.