கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 1 பந்தில் 13 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். 4-வது போட்டியில் சிஜோமோன் ஜோசப் வீசிய 5-வது ஓவரை எதிர் கொண்ட சஞ்சு சாம்சன் நோ பாலில் சிக்ச் அடித்ததுடன், ஃப்ரீ ஹிட் பந்திலும் சிக்ஸ் அடித்து 13 ரன்களை எடுத்தார்.