உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்ரீ சரணிக்கு இரண்டரை கோடி ரூபாய் பரிசுத் தொகையும், குருப் 1 நிலையிலான அரசு வேலை மற்றும் 1,000 சதுரடி வீட்டு மனை ஆகியவை வழங்கப்படும் என ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஸ்ரீ சரணி, முன்னாள் கேப்டன் மித்தாலி ராஜ் ஆகியோர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். அப்போது, இந்திய வீராங்கனைகள் கையெழுத்திட்ட கிரிக்கெட் ஜெர்சியை முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு, ஸ்ரீ சரணி பரிசளித்தார்.