கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய சூப்பர்ஸ்டார்களை தக்க வைப்பதில், அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகிளள்ளது. அதன்படி நட்சத்திர வீரரான கிளாசனுக்கு மட்டும் 23 கோடி ரூபாய் ஊதியம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதே போல் பேட் கம்மின்சுக்கு 18 கோடி ரூபாயும், அபிஷேக் சர்மாவுக்கு 14 கோடி ரூபாய் கொடுக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.