பெங்களூரு அணியின் ரொமாரியோ ஷெப்பர்ட் சி.எஸ்.கே. அணிக்கு எதிராக 14 பந்துகளில் 53 ரன்கள் குவித்ததே இந்த ஆண்டின் சிறந்த இன்னிங்ஸ் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்தார். கேப்டன் படிதாரின் அச்சமற்ற அணுகுமுறை மற்றும் விராட் கோலியின் பார்ம் ஆகியவை சிறப்பாக இருந்ததாக கூறினார்.