ரோகித் சர்மா, சமூக வலைதளத்தில் ஓய்வை அறிவிக்காமல், மைதானத்தில் ஆடும் போது ஓய்வு பெற்றிருந்தால், அது மிகவும் பிரியாவிடையாக இருந்திருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி தெரிவித்தார். டெஸ்ட் கேப்டனாக ரோகித்தின் சாதனை, மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அவரது வெற்றி விகிதம் குறித்து எந்த சந்தேகமும் இருக்க கூடாது என்றும் திவாரி கூறினார்