மும்பையில் இதுவரை இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வரும் நிலையில், மும்பை மக்கள் அனைவரும் பத்திரமாக, பாதுகாப்பாக இருங்கள் என இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த 2 நாட்களாக இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. இந்நிலையில், மும்பை மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி ரோகித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.