ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்ததன் பின்னணியில் தலைமை பயிற்சியாளர் கம்பீர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர் புதிய அணியை கட்டமைக்க விரும்புவதாகவும், அதனாலேயே விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை கழற்றி விட தேர்வு குழுவுக்கு அவர் பரிந்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு புதிய வீரர்களை கொண்டிருப்பது பொருத்தமானது என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரும் கருதுவதால், அவருடைய ஆதரவையும் கம்பீர் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.