சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ரியா பாட்டியா-ருதுஜா போஸ்லே ஜோடி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற இருந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷ்யாவின் மரியா டிமோஃபீவா, போலினா இட்சென்கோ இணை போட்டியில் இருந்து விலகியதால் இந்திய இணை அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.