2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேபிடெல்ஸ் அணியின் தக்க வைப்போர் பட்டியலில் கேப்டன் ரிஷப் பந்தின் பெயர் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய பெயர் ஐபிஎல் ஏலத்துக்கு வந்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? என ரிஷப் பந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.