பஞ்சாப் அணியின் வெளிநாட்டு வீரர்களை சொந்த நாட்டிற்கு செல்ல விடாமல், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், டெல்லியில் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியானது. மற்ற அணி வீரர்கள் தாயகம் சென்றுவிட்ட நிலையில், இங்குள்ள சூழல் தற்காலிகமானது தான் என்றும், நிச்சயம் ஐபிஎல் தொடர் மீண்டு நடக்கும், அதுவரை தன்னுடைய பாதுகாப்பில் தங்குங்கள் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது.