ஆசிய கோப்பையை இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பிசிசிஐ அனுப்பிய கடித த்திற்கு பதிலளித்துள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில், துபாயில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அங்கு வைத்து கோப்பையை பெற்றுக் கொள்ளுமாறு பழைய பல்லவியை பாடி உள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற மறுத்துள்ள இந்தியா, துபாயில் இதற்கென்று தனியாக நிகழ்ச்சி நடத்த முடியாது என்றும் கோப்பையை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறும் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இது தொடர்பாக இந்திய பிரதிநிதி ராஜீவ் சுக்லா மற்றும் இலங்கை, ஆப்கன் பிரதிநிதிகள் மோஷின் நக்விக்கு கடிதம் எழுதியும் அவர் பிடிவாதமாக இருப்பதால், விவகாரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கொண்டு செல்ல பிசிசிஐ முடிவு செய்துள்ளது.