டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் அணிக்காக விளையாடும் அஸ்வின், மைதானத்தில் பெண் நடுவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திருப்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் LBW முறையில் ஆட்டமிழந்தார். ஏற்கனவே 2 ரெவியூக்களையும் இழந்ததால் அவரால் அந்த விக்கெட்டுக்கு ரெவியூ எடுக்க முடியவில்லை.இதனால் பெண் நடுவரிடம் முறையிட்ட அஸ்வின், பின்னர் கடுப்பாகி தனது பேட்டை கொண்டு தனது தொடையை அடித்தார். பின்னர் கிளவுஸை கழட்டி வெளியே வீசினார்.